திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே மாவடி புதூரைச் சேர்ந்த மோகன் (54). என்பவர், களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் எட்டாம் வகுப்பு மாணவியை தனது அறைக்கு அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து மாணவி தெரிவித்த தகவலின் பேரில், அவரது பெற்றோர் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து, மோகனை (16.03.2025) அன்று கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்