திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை செக்கடி பகுதியைச் சோ்ந்தவர் ஆறுமுகம் (25). சமையல் தொழிலாளி. இவா், அப்பகுதியில் வசிக்கும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தாராம். இது குறித்து சிறுமியின் பெற்றோா் திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்