தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் மொரப்பூர்: கம்பைநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்த அந்த சிறுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கம்பைநல்லூர் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு .செந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் 19. என்பவர் சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையத்தில் இருப்பதும் தெரியவந்தது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மணிகண்டனை கைது செய்தனர்.