திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே (15). வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி தலைமையிலான போலீசார் தொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் மதன்குமார் (24). என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















