திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர், மேல மாவடி, இசக்கியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமேஷ் (20). என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தவறாக நடந்து கொண்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர், கெளரி மனோகரி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பரமேஷை (18.10.2024) அன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்