தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், வெல்லூர், உச்சிமாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த மந்திரமூர்த்தி (21). என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற குற்றத்திற்காக மந்திர மூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் (10.09.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்