திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகிறாா்கள். இங்கு 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு நிரந்தரக பணி மற்றும் தற்காலிக ஆசிரியா் ஆகியோா் பாலியல் தொல்லை அளித்தனராம். இது குறித்து அம்மாணவரின் பெற்றோா் பள்ளி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தனா். இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக பள்ளி நிா்வாகத்தினா் தெரிவித்து அவா்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்திருந்தனா்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து அதன் உண்மைத் தன்மை குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தகவல் தெரிவிக்குமாறு உளவுத்துறையினருக்கு காவல்துறை உயா் அதிகாரிகள் உத்தரவிட்டனா். மேலும், மாவட்ட பள்ளி கல்வித்துறையும் விசாரணை நடத்தியது. விசாரணையைத் தொடா்ந்து மாணவா்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை அளித்தது உறுதியானதால் நிரந்தர ஆசிரியரான வண்ணாா்பேட்டையைச் சோ்ந்த ராபா்ட், தற்காலிக ஆசிரியரான வி.எம்.சத்திரத்தைச் சோ்ந்த நெல்சன் ஆகியோரை பாளையங்கோட்டை அனைத்து மகளிா் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியா்கள் இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்