மதுரை: மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணை குழு உத்தரவின் படி வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் வட்ட சட்ட பணி குழு சார்பாக போதை பொருள் ஒழிப்பு, போக்சோ சட்டங்கள் பற்றி விழிப்புணர்வு முகாம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த முகாமிற்கு தலைமை ஆசிரியர் வாசிமலை தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் மரிய ஜோசப் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் வட்ட சட்ட பணி குழு தலைவர் நீதிபதி ராம் கிஷோர் தலைமையில் வழக்கறிஞர்கள் முத்துமணி, விஜயகுமார்,சீனிவாசன், அழகர்சாமி, சுமிதா ஆகியோர் போதை பொருள் ஒழிப்பு, போக்சோ சட்டங்கள் பற்றி விளக்கி பேசினர்.முடிவில் ஆசிரியர் சக்தி குமார் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி