திண்டுக்கல் : திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த (13). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகங்கை, இளையான்குடியை சேர்ந்த சித்தரைவேல் மகன் பிரதீப்ராஜ்(28). என்பவர் மீது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.
இது குறித்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துமணி சார்பு ஆய்வாளர் வனிதா மற்றும் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு பிரதீப்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா