திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில், பாலியல் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ கோர்ட்டு திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை தாங்கி, ரிப்பன் வெட்டி போக்சோ கோர்ட்டை திறந்து வைத்தார். கலெக்டர் விசாகன், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், தலைமை ஜூடிசியல் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா