திண்டுக்கல்: திண்டுக்கல், செம்பட்டி அருகே போடிகாமன்வாடியை சேர்ந்த கோவிந்தன் மகன் வினித் (எ) ராமு இவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஜனவரி மாதம் செம்பட்டி போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி சிறையில் இருந்து வினித்தை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த செம்பட்டி சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வராஜ், காவலர் ஆரோக்கியசாமி ஆகிய இருவர் அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றபோது அஞ்சலி ரவுண்டானா பகுதியில் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடினார்.
இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்நிலையில் தனிப்படை அமைத்து வினித்தை தேடிவந்த நிலையில் செம்பட்டி அடுத்த கோடிக்காமன்வாடி பகுதியில் உள்ள தோட்டத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா