திருநெல்வேலி : திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரியைச் சேர்ந்த சிறுமிக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் தெற்கு சிந்தல கோட்டையை சேர்ந்த ரமேஷ் (33) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சீவலப்பேரி காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட மகேஷுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து (29.08.2025) அன்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்