திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி, அண்ணா நகரை சேர்ந்த சௌந்தர்ராஜ் (67). என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அம்பாசமுத்திரம், அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சௌந்தர்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வழக்கு மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் சௌந்தர்ராஜ்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்