திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சுமேஷ் (33). என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு , வழக்கின் விசாரணை திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் (25.02.2026) அன்று குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் 25,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணையை சிறப்பாக கண்காணிப்பு செய்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சண்முகம் (CWC) சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர்கள், மங்கையர்கரசி, ஜென்சி (தற்போது குமரி மாவட்டம்), பெண் தலைமை காவலர், ஜோதி ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு .வி. பிரசண்ணகுமார், இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
நிகழாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் போக்சோ குற்றவாளிகளில் ஒரு குற்றவாளிக்கு மரண தண்டனையும், 1 குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















