திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, தம்புபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா (58). இவர், கடந்த 2022இல் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் நான்குனேரி மகளிர் காவல்துறையினரால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, விசாரித்த நீதிமன்றம் முத்தையாவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து (26.08.2025) அன்று தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறன் பட செயல்பட்டு குற்றத்தை நிரூபித்து குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க வழிவகுத்த காவல் ஆய்வாளர்கள், பிரேமா ஸ்டாலின், மங்கையா்கரசி, நான்குனேரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தர்ஷிகா நடராஜன் உள்ளிட்ட காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N..சிலம்பரசன், இ.கா.ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்