திருச்சி : திருச்சி மாவட்டம், துவாக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பாக சரவணன்(30). என்பவர் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சரவணன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் வழக்கு விசாரணையானது திருச்சி மகிளா நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், குற்ற செயலில் ஈடுபட்ட சரவணனுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ரூபாய் 50,000/- அபராதமும் விதித்து (25.08.2025) தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.