திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகேயுள்ள விஜயஅச்சம்பாடு பகுதியைச் சேர்ந்த நாமதுரை மகன் ராமகிருஷ்ணன் (24). இவர், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து (02.12.2025) அன்று தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் திறன் பட புலன் விசாரணை செய்த துணை காவல் கண்காணிப்பாளர் யோகேஷ் குமார், (தற்போது விருதுநகர் மாவட்டம்), விசாரணை துரிதமாக நடைபெற கண்காணிப்பு செய்த துணை காவல் கண்காணிப்பாளர், வெங்கடேஷ், காவல் ஆய்வாளர் சாந்தி, மற்றும் மகளிர் காவலர்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N . சிலம்பரசன், இ.கா. ப., பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















