தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த 2021ம் ஆண்டு (15). வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பழனியப்பபுரம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா (28/25). என்பவரை திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இதனை விசாரித்த நீதிமன்றம் (19.09.2025), அன்று குற்றவாளி இசக்கி ராஜாவிற்கு 10 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூபாய் 5000/- அபராதம் தீர்ப்பு வழங்கியது. இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், இந்திரா, சிறப்பு உதவி ஆய்வாளர் லிங்ககனி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்