திருநெல்வேலி : திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில், கடந்த 2023 ஆம் ஆண்டு மூன்று சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆனந்த சேகர் என்பவர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றம் (12.03.26) அன்று குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதித்தும், மற்றொரு பிரிவில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட 03 சிறுமிகளுக்கும் தலா 07 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவு பிறப்பித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்















