திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆனைக்குடி, பெருமாள்புரம், நடுத்தெருவை சேர்ந்த முத்து (39). கடந்த 2022 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்ததால் போக்சோ வழக்காக திருநெல்வேலி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்து வந்த போக்சோ நீதிமன்றம் குற்றவாளியான முத்துவுக்கு மூன்று பிரிவுகளின் கீழ் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் மற்றும் ரூபாய் 15,000/- அபராதமும் , அபராதம் கட்ட தவறினால் 2 1/2 வருடம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ், மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் துறையினரையும் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
