திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே அலவந்தான்குளம், கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி (62). ஒரு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் கருப்பசாமிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1000/- ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த மானூர் காவல் நிலைய காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்