திருநெல்வேலி: திருநெல்வேலி, அருகேயுள்ள மேலக்கருங்குளம் பீடி காலனி, ரோஜா நகரை சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (49). ஆட்டோ ஓட்டுநரான இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த (8). வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம். இது குறித்த புகாரின் பேரில் திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீசார் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனா்
திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி சுரேஷ்குமாா் (பொறுப்பு) விசாரித்து, பாலசுப்பிரமணியனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்