திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு அம்பலவானபுரத்தை சேர்ந்த தமிழ் செல்வன் (77). என்பவர் (12). வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு, தமிழ்செல்வனை கைது செய்தனர். வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றவாளி தமிழ் செல்வன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றம் (04.12.2025) அன்று குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5000/-அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் 1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தீர்ப்பளித்தது.
இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் குமார், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், வனிதா மற்றும் காவல் நிலைய ஆளிநர்களையும், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப. வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















