திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, நடுத் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (55). என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு சுப்பிரமணியத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வந்த மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் (பொறுப்பு) சுப்பிரமணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் காவல்துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்.இ.கா.ப., வெகுவாக பாராட்டினார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்