திருநெல்வேலி: திருநெல்வேலி பா்கிட்மாநகர் பகுதியில் வசித்து வந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த ஜகுபர் உசேன் என்பவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த (17). வயது சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல்துறையினர் ஜகுபர் உசேனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட ஜகுபர் உசேனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து (15.07.2025) அன்று தீர்ப்பளித்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்