திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், கலியாவூரைச் சேர்ந்த அபுபக்கர் என்பவரின் மகன் செய்யது இப்ராஹீம் ஷா (23). போக்சோ வழக்கு குற்றவாளி. இவர் மீது திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மாரியம்மாள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விடுத்த கோரிக்கை படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன். இ.கா.ப., பரிந்துரைபடி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், (04.09.2025) அன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்