தேனி: தேனி அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ராமர் இவரது மகன் ரஞ்சித் 24 கடந்த வருடம் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று அந்த சிறுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர், ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து டாக்டர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் திருமதி.முனியம்மாள் விசாரணைசெய்தார். இதை தொடர்ந்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் கணவர் ரஞ்சித்தை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.