திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., வழிகாட்டுதலின்படி, காவல் துணை ஆணையர், S.விஜயகுமார் தலைமையில், (06.10.2024)ஆம் தேதி பாளையம்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாரப்பேட்டையில் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களிடம் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிவதின் அவசியம் குறித்தும், அதிக பாரம் ஏற்றாமல் வாகனம் ஓட்டுவது, மற்றும் சாலை பாதுகாப்பு விதிகளை விளக்கி, விபத்துக்களை குறைப்பது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் பாளை காவல் உதவி ஆணையர் சுரேஷ், பாளை போக்குவரத்து ஆய்வாளர், செல்லதுரை மற்றும் காவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்