திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரின் நகர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பழனிசாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் பஸ் ஸ்டாண்ட், நாகல்நகர், காந்திமார்க்கெட், சப் ஜெயில் ரோடு, திருச்சி ரோடு, மதுரை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஹெல்மட் அணியாமல் வருவது குடிபோதையில் வாகனங்களை இயக்குவது, உள்ளிட்ட போக்குவரத்து விதி மீறல்களுக்கு வழக்குகள் பதியப்பட்டது. அந்த வகையில் கடந்த மாதம் 2416 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள்பதியப்பட்டு அபராதமாக ரூ.6 லட்சம் விதிக்கப்பட்டது. இதில் 23 வழக்குகள் குடிபோதையில் வாகனங்களை இயக்கியதாக பதியப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா