திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., உத்தரவின் படி (08-01-2024) ம் தேதியன்று, சந்திப்பு போக்குவரத்து காவல் ஆய்வாளர், மணிமாறன் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் இணைந்து லிட்டில் பிளவர் பள்ளியில் மாணவ, மாணவியர்க்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேருந்துகளில் படியில் நின்று ஆபத்தான பயணம் செய்வது, ஓட்டுநர் உரிமம் பெற தகுதியில்லாத (18) வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்பது உட்பட பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்