திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப., உத்தரவின் படி காவல் துணை ஆணையர்கள் V.கீதா,(மேற்கு) G.S.அனிதா, (தலைமையிடம்) மற்றும் S.விஜயகுமார், (கிழக்கு) ஆகியோரின் மேற்பார்வையில், திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி வரும் நிலையில் (12-11-2024) ம் தேதியன்று, தூய சவேரியார் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம், பாளையங்கோட்டை போக்குவரத்து காவல் ஆய்வாளர், செல்லத்துரை மற்றும் காவல் துறையினர் மது, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், பேருந்து படிகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், (18) வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் வாகனங்கள் ஓட்டக்கூடாது என்பது உட்பட போக்குவரத்து விதிகளை பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் செய்ய வேண்டியவை குறித்து அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சியில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
சண்முகநாதன்