அரியலூர்: ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மதிவாணன் அவர்கள் தலைமையில், உடையார்பாளையம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம், வாகனச் சான்றிதழ் மற்றும் அவர்களின் உரிமம் சரிபார்க்கப்பட்டது. மேலும் போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.