திண்டுக்கல் : தேசிய சாலை பாதுகாப்பு மாதம் ஜனவரி 1 முதல் 31 வரை கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து S.P.பிரதீப் உத்தரவின் படி ASP. சிபின் மேற்பார்வையில் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போக்குவரத்து போலீசார் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், கார், பேருந்து, சரக்கு வாகனம், வேன் உள்ளிட்ட வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியும், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் குச்சி மற்றும் ஒளிரும் பட்டை வழங்கி இரவில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா