மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, திருப்பரங்குன்றம் காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருபவர் முருகன் (வயது 52). தெற்கு வாசல் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக போக்குவரத்து பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ,சத்யா (வயது 47) .என்ற மனைவியும் மற்றும் அமிர்தவல்லி (வயது22) .என்ற மகளும் இவருக்கு திருமணம் முடித்து தனியாக வசித்து வருகிறார். மேலும் ,ஹரிஷ் (வயது19). என்ற மகன் உள்ளார். ஹரிஷ் மதுரை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சூரசம்கார விழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் ஒக்கலிங்கர் திருமண மண்டபம் அருகே போக்குவரத்து பாதுகாப்பு பணியில் இருந்தபோது, இரவு 7 மணி 40 மணி அளவில் ஆரப்பாளையத்தில் இருந்து திருமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தில் பலத்த காயம் அடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.அங்கிருந்து வேலம்மாள் மருத்துவமனை கொண்டு செல்லும் பொழுது அவர் உயிர் பிரிந்தது . விபத்து குறித்து, மதுரை தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் கந்த சஷ்டி விழாவில், பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் முருகன் பணியின்போது விபத்தில் இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி