கோவை : அதிக மழை காரணமாக கோவை சிங்காநல்லூர், வெள்ளலூர் செல்லும் தரைப்பாலத்தில், மிக அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருந்த காரணத்தினால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாலத்தை பார்வையிட்டு பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் இருப்பதற்கு அறிவுரைகள் வழங்கினார். ஆணையாளருடன், சிங்கநல்லூர் காவல் ஆய்வாளர் திரு. அருண், அவர்கள் இருந்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்