கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் வந்து கொண்டிருந்த லாரி திடீரென்று பழுதாகி நடுவழியில் நின்றுவிட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக மீட்பு வாகனம் மூலம் அந்த லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு சரி செய்த போக்குவரத்து காவலர்களுக்கு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
















