ராமநாதபுரம் : பரமக்குடியில் புதிய போக்குவரத்து காவல் நிலையம் திறப்பு விழா ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இணைந்து திறந்து வைத்தனர். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 67.71 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட போக்குவரத்து காவல் நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சரகம் காவல்துறை துணைத் தலைவர் துரை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோர் இணைந்து புதிய போக்குவரத்து காவல் நிலைய கட்டடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன்,நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில் சுரேஷ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் காந்தி,அருண், பரமக்குடி துணை கண்காணிப்பாளர் சபரிநாதன், காவல் ஆய்வாளர் நவநீத கிருஷ்ணன்,தாலுகா ஆய்வாளர் காளிதாஸ், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆயிர வைசிய சபை இணைத் தலைவர் பாலுச்சாமி, வியாபாரிகள் சங்க துணைத் தலைவர்கள் ஜீவானந்தம், சுப்பையா, பொதுச்செயலாளர் மணிவண்ணன், தங்கம்மாள் ரஹிம் அறக்கட்டளை நிறுவனர் முனைவர் முகம்மது அலி ஜின்னா, ஒருங்கிணைப்பாளர் குயின் இப்ராஹிம்ஷா, நகர்மன்ற உறுப்பினர் சதீஸ்குமார் மற்றும் நகர் மற்றும் தாலுகா, காவல் சார்பு ஆய்வாளர்கள், ஆளிநர்கள், பரமக்குடி உட்கோட்ட காவல் துறையினர், முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி