திண்டுக்கல்: திண்டுக்கல்லில் சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை மண் போட்டு மூடிய போக்குவரத்து காவல்துறையினர். திண்டுக்கல், வாணிவிலாஸ் சிக்னல் அருகே சாலையின் நடுவே உள்ள பள்ளத்தை வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் கடந்து சென்றனர். இதைப் பார்த்த திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய சார்பு ஆய்வாளர் விக்னேஷ்குமார் காவலர் மோகன் உள்ளிட்டோர் பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் போக்குவரத்து காவல்துறையினரை பாராட்டிய படி கடந்து சென்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















