திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் வழியாக 4000க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் இயக்கப்படுகிறது. இந்த கனரக வாகனங்கள் காமராஜர் துறைமுகம் மற்றும் அதானி துறைமுகத்திற்கு வந்து செல்கின்றன. இந்த சாலையில் நான்கு தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 4500 மேற்பட்ட மாணவர்கள் தினமும் பள்ளிக்கு வந்து செல்கிறன்றனர். மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கனரக வாகனங்கள் காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் இயக்க தடைபெற்று, தற்பொழுது இந்த தடை நடைமுறையில் உள்ளது. இந்த தடை காலம் கடந்த பிறகு, அதாவது காலை 9 மணிக்கும் மாலை 4.30கும் மீண்டும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
இச்சமயத்தில் கனரக வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு முந்திச் செல்ல சாலையை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டு செல்கிறது. இதனால் இச்சாலைகளில் விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது. இது வரை பல இரு சக்கர வாகன ஓட்டிகளும் நடைபாதர்களும் பலியாகி உள்ளனர். இன்று காலை 9 மணி அளவில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில், தனியார் பள்ளிக்கூட கேட்டின் முன்னே இரண்டு கனரக வாகனங்கள் நடுவில் இரு சக்கர வாகனம் சிக்கிக் கொண்டது. அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டி உயிர் தப்பினார். இப்பகுதியில் மூன்று தனியார் பள்ளிகள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது . எனவே உடனடியாக நெடுஞ்சாலை துறை அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தருவதோடு விதிகளை மீறும் வாகனங்களும் மீது போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் பொதுமக்கள் கேட்டுக்கொள்கிறேன்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சையது அலி