திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் துறை மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்கம் சார்பில் கோடை வெப்பத்தை தணிக்க போக்குவரத்து காவலர்களுக்கு கழுத்தில் அணியக்கூடிய பேட்டரியால் இயங்கும் சிறிய வகை மின்விசிறி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) மற்றும் இந்திய பல் மருத்துவர் சங்க நிர்வாகிகள், போக்குவரத்து காவல் உதவி ஆணையர், அசோக் குமார், பாளை போக்குவரத்து ஆய்வாளர், செல்லதுரை மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்