கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அமர்நாத் அவர்கள் கிருஷ்ணசாமி பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு உங்களது வாகனத்தில் பள்ளி மாணவர்கள் பயணம் செய்கிறார்கள். மாணவர்கள் பத்திரமாக பயணம் மேற்கொள்ள மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் எனவும், உரிய நேரத்துக்கு முன்னதாகவே வாகனத்தை இயக்க வேண்டும், வேகமாக ஓட்டக்கூடாது, முதலுதவி பாதுகாப்பு உபகரணங்கள் வாகனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.