திண்டுக்கல்: திண்டுக்கல் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நூற்றுக்கணக்கான மூன்று சக்கர வாகனங்கள் எந்தவித வாகன பதிவு எண், இன்சூரன்ஸ், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தினமும் இயங்கி வருகின்றன. இவ்வாகனங்கள் அதிக சுமை ஏற்றி, விதிகளை மீறி இயங்குவதால் பொதுமக்களின் உயிருக்கு மிகப்பெரிய அபாயமாக உள்ளது. கடந்த காலங்களில் பல விபத்துகள் நடந்திருந்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சூழ்நிலையில் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர். பழனிச்சாமி அவரது தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையின் போது அதிக பாரம்,எவ்வித பதிவு இன்றி சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்பட்ட மூன்று சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் இதனை போக்குவரத்து காவல்துறை மற்றும் பிராந்திய போக்குவரத்து அலுவலகம் (RTO) இந்த சட்டவிரோத வாகனங்களை கண்டு அதனை இயக்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் முதல் பொதுமக்கள் கோரிக்கையுடன், சட்ட விரோத மூன்று சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விதிகளை மீறும் ஓட்டுநர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய,
வலியுறுத்தப்படுகிறது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா