கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார், ஐ.பி.எஸ்., அவர்கள் வடலூரில் நடைபெற உள்ள வள்ளலார் தைப்பூசம் திருவிழா பாதுகாப்பு பணிகளை முன்னிட்டு, வாகனங்கள் போக்குவரத்து மாற்றம் மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் தொடர்பாக காவல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், திருவிழா நாட்களில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறை சிறப்பாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், வாகன நெரிசலைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. அப்பண்டராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
















