கன்னியாகுமரி: குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து கன்னியாகுமரி போக்குவரத்துக் காவல்துறை நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. *சுந்தரவதனம் IPS அவர்களின் உத்தரவுப்படி காவல் துணை கண்காணிப்பாளர் திரு *மகேஷ் குமார் TPS கன்னியாகுமரி அவர்களின் மேற்பார்வையில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு பிரபு போக்குவரத்து உதவி ஆய்வாளர் திரு ஜெயபிரகாஷ் மற்றும் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு பால்கனி & திரு ஐயப்பன் ஆகியோர் கன்னியாகுமரி சர்ச் ரோடு மற்றும்
அஞ்சுகிராமம் பகுதியில் வாகன தணிக்கையின் போது (18) வயதிற்கு குறைவான &ஓட்டுநர் உரிமம் இன்றியும், நம்பர் பலகை இல்லாமலும், தகுந்த ஆவணங்கள் இன்றியும் ஓட்டி வந்த 15 இருசக்கர வாகனங்கள் & 2 டெம்போ, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். பின்னர் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டிய ஓட்டுநர்களின் பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு தக்க அறிவுரைகள் வழங்கி அனுப்பபட்டது. மேலும் இன்று 280 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.