அரியலூர் : அரியலூர் மாவட்டம், கயர்லாபாத் காவல் உதவி ஆய்வாளர் திரு. கோவிந்தசாமி, மற்றும் காவல் துறையினர், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விளாங்குடி பேருந்து நிலையம் அருகே திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், ஒருவர் குடிபோதையில், சாலையின் குறுக்கே தடுப்புக்கம்பியை போட்டு போக்குவரத்துக்கு இடையூறு செய்து, பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து காவல் துறையினர், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் விளாங்குடி காலனி தெருவை சேர்ந்த சாமிதுரை (55), என்பதும் தெரியவந்தது. இது குறித்து காவல் துறையினர், வழக்குப்பதிந்து சாமிதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.