திருப்பூர் : திருப்பூர் சாலையில் உள்ள மகாலட்சுமி நகர் பகுதியில் திருப்பூர் உஷா தியேட்டர் அருகே வசிக்கும் செல்வராஜ் என்பவர், தான் ஓட்டிச்சென்ற கார் ஒன்றை, போதை தலைக்கேறியதால் இயக்க முடியாமல் நடு ரோட்டிலேயே தத்தளித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து பல்லடம் காவல்துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் தெரிவிக்கவே, விரைந்து சென்ற பல்லடம் காவலர்கள் திரு.முத்து, திரு.சுருளி என்பவர்கள் தனது இருசக்கர வாகனத்தில் ஐந்து கிலோமீட்டர் தூரம் காலையிலேயே காரை தள்ளிக்கொண்டு வந்து காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் நிறுத்திய சம்பவம் நடைபெற்றது. இதைக்கண்ட இப்பகுதி மக்கள் வெகுவாக அவரைப் பாராட்டினர்.