திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள அணைத்தலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் (38). தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் இவர் அணைத்தலையூர் ஊர் நாட்டாண்மையாகவும் உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் அங்குள்ள கிராம சமுதாய நலக்கூடத்தின் கதவை காலால் மிதித்து சேதப்படுத்தி உள்ளனர். அதைக் கண்ட வினோத் அவர்களை தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து வினோத் கங்கைகொண்டான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அணைத்தலையூரைச் சேர்ந்த ராஜா மகன் இசக்கிமுத்து (23). செல்லத்துரை மகன் ராஜ்குமார் (37). சூசைமுத்து மகன் அமல்ராஜ் (25). ஆகியோரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்