ஈரோடு: ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தங்கதுரை அவர்கள் உத்தரவின்படி, ஈரோடு மாவட்ட காவல்துறையினர் சாலை பாதுகாப்பு மற்றும் கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று 22- 7- 2020 தேதி சென்னிமலை காவல் ஆய்வாளர் திரு. எம். செல்வராஜ் மற்றும் சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. அமுதா ஆகியோர் தலைமையில் முகக் கவசம் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அனைத்து கடைகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கடைகளை திறந்து, அதற்கேற்ப ஒதுக்கப்பட்ட நேரத்தில் கண்டிப்பாக மூட வேண்டும் என ஆலோசனை வழங்கி, முகக் கவசங்கள் மற்றும் Sanitizer ன் முக்கியத்துவம் குறித்தும், கடைகளில் கண்டிப்பாக அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென அறிவுறுத்துங்கள் எனவும், அனைவரும் தங்கள் கடைகளின் முன்பாக சுவரொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் சமூக இடைவெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென ஆலோசனை வழங்கினார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா