திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன், இ.கா.ப., இணைய செயலி பயன்படுத்தும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கேட்டுக் கொண்டுள்ளார். அதில் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம். X தளம். பேஸ்புக் ஆகிய தளங்களில் தற்போது Trending No.1 -ல் இருந்து வரும் AI tool -ஐ பயன்படுத்தி மொபைல் போனில் எடுக்கப்படும் நமது புகைப்படங்களை தனித்துவமாக Ghibli photo cartoon போன்று மாற்றி தருவதற்கு இதற்கென பிரத்தியோகமான தளங்கள்/Website வடிவமைத்து கொடுக்கிறது. எனவே இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி போலியான தளங்கள்/Website உருவாக்கப்பட்டுள்ளன.
இது போன்ற போலியான தளங்களில் உங்களது புகைப்படங்களை Ghibli photo ஆக மாற்றுவதற்கு பதிவேற்றம் (upload) செய்தால் உங்களின் புகைப்படங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளதால், உறுதி செய்யப்பட்ட வலைதளங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்றால் சைபர் கிரைம் இணையதளத்தில் www.cybercrime.gov.in உடனடியாக உங்களுடைய புகாரினை பதிவு செய்யுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்