கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்கள் ஊர்க்காவல் கண்காணிப்பு திட்டம் ( ஒரு காவலர்/2 CCTV) தொடங்கி வைத்து அதனை கண்காணித்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் கிராமங்களில் நியமிக்கப்பட்ட காவலர்களில்பாஸ்போர்ட், போலீஸ் வெரிஃபிகேஷன் சர்டிபிகேட் பெறுவதற்கு பொது மக்களுக்கு உதவுதல் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்கூட்டியே தடுத்தல் கிராமங்களின் பாதுகாப்பிற்கு பொதுமக்கள் உதவியுடன் சிசிடிவி ஏற்படுத்துதல் சைபர் கிரைம், வேலை வாய்ப்பு மோசடி, சிட் பண்ட் குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போதைப் பொருள், பிரச்சனைகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே காவல் நிலைய அதிகாரிக்கு தெரிவித்தல் காவல் நிலையத்திற்கும் பொது மக்களுக்கும் ஒரு பாலமாக செயல்படுதல் ஆகிய பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
















